தமிழ் சினிமாவிற்கு பல எதார்த்த படைப்புகளை தந்து திரை ரசிகர்களை மகிழ்ச்சி மழையில் ஆழ்த்துபவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இன்றளவும் இவரது படங்களான சென்னை-28, கோவா, சரோஜா போன்ற படங்களை ரசிகர்கள் பெரிதும் விரும்புவர். தல அஜித்தின் 50-வது படமான மங்காத்தா எனும் மாபெரும் வெற்றி படத்தை தந்த பெருமையும் இவரையே சேரும். 

Blooper King Director Venkat Prabhus Production Venture Movie RK Nagar Release Update

இவர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் தான் பார்ட்டி. இப்படத்தில் ஜெய், அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கேசன்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பேத்துராஜ் போன்ற நட்சித்திர பட்டாளமே உள்ளது. இசை சுனாமி பிரேம்ஜி இப்படத்திற்க்கு இசையமைக்கிறார்.

Blooper King Director Venkat Prabhus Production Venture Movie RK Nagar Release Update

இதைத்தொடர்ந்து STR வைத்து மாநாடு படத்தை இயக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் துவங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Blooper King Director Venkat Prabhus Production Venture Movie RK Nagar Release Update

தற்போது இவரது தயாரிப்பில் RK நகர் படம் ஏப்ரலில் வெளியாகவுள்ளது. இதுகுறித்து இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். black ticket பெருமையுடன் வழங்கும் இந்த படத்தை பத்ரி கஸ்தூரி மற்றும் ராஜலக்ஷ்மி தயாரிக்கின்றனர். இசை சுனாமி பிரேம்ஜி இசையமைக்கிறார். தேர்தல் தருணத்தில் இந்த படம் வெளியாவது, ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.