கனா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்பில் , சின்னத்திரை தொகுப்பாளரும்,நடிகருமான ரியோவை வைத்து சிவகார்த்திகேயன் ஒரு படத்தை எடுத்து வருகிறார்.கார்த்திக் வேணுகோபால் இந்த படத்தை இயக்குகிறார்.

Sivakarthikeyan Production Two Starring Rio Raj in Lead Directed by Karthik Venugopal started Dubbing Works

இந்த படத்தில் RJ விக்னேஷ்காந்த்,ராதாரவி,நாஞ்சில் சம்பத் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இந்த படத்தின் டப்பிங் வேலைகள் இன்று தொடங்கியுள்ளது.சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கிய இந்த டப்பிங்கில் ஹீரோ ரியோ,RJ விக்னேஷ்காந்த்,ராதாரவி உள்ளிட்ட நடச்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் படக்குழு வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.