தமிழ் சினிமாவிற்கு முண்டாசுப்பட்டி,ராட்சசன் போன்ற சிறந்த படைப்புகளை தந்தவர் இயக்குனர் ராம்குமார். சமீபத்தில் வெளியாகிய இவரது ராட்சசன் படம் சிறப்பான வரவேற்பை பெற்றது.

Raatchasan Fame Villain Saravanan Aka Christopher Make Up Video

விஷ்ணுவிஷால், அமலாபால் போன்ற நடிகர்கள் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தனர். ஜிப்ரான் இசையில் படத்தின் ஒவ்வொரு காட்சியும் சினிமா விரும்பிகளை மிகவும் ஈர்த்த வண்ணமுள்ளது. திரை பிரபலங்களின் மத்தியிலும் அதிகமான பாராட்டுகளை பெற்று வருகிறது இப்படம்.

படத்தின் முக்கிய அங்கமாக விளங்கிய ராட்சசன் படத்தின் வில்லன் யார் என்ற கேள்வி அனைவருக்கும் எழத்துவங்கியது. கிறிஸ்டோபர் என்ற வில்லன் வேடத்தில் திரையில் தோன்றி அனைவரையும் வெகுவாக கவர்ந்தார் நடிகர் சரவணன்.

தற்போது அவர் அந்த கிறிஸ்டோபர் பாத்திரதிற்கு எப்படி தயாரானார் என்பதை வெளியிட்டுருக்கின்றனர் படக்குழுவினர். கடின ஈடுபாட்டுடன் செயல்பட்ட நடிகர் சரவணனின் உழைப்பு பாராட்டிற்குரியது.