சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆஸ்தான மேக்-அப் மேன் ஏவிஎம் முத்தப்பா இன்று காலை காலமானார். பராசக்தி படத்தில் சிவாஜி கணேசனுக்கு முதன்முதலாக தனது மேக்கப் பணியை துவங்கியவர், கமல்ஹாசனின் முதல் படமான களத்தூர் கண்ணம்மா என பல படங்களில் ஒப்பனையாளராக இருந்திருக்கிறார். 

Veteran Make Up Man AVM Fame Muthappa Died Today Rajinikanth Arrives Jus Now

60 ஆண்டுகளாக திரை அனுபவம் பெற்றவர் ஆவார். திரை ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராஜ்குமார் போன்ற முன்னணி கதாநாயகர்களிடம் மேக்-அப் மேனாக பணியாற்றியவர். ஒரு கட்டத்தில் ரஜினியின் பர்சனல் மேக்-அப் மேனாக மாறி அவரிடம் மட்டுமே பணியாற்றத் துவங்கினார். ரஜினிகாந்த் இவர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து ரஜினி நடித்த சில படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் நடிக்கவும் செய்தார். இத்தகைய புகழ்பெற்ற மேக்-அப் மேன் முத்தப்பா இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு திரையுலைகைச் சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.