இந்தாண்டு வெளிவர உள்ள படங்களில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் சூர்யாவின் என் ஜி கே.செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தினை Dream Warrior Pictures சார்பில் SR பிரபு தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

After Superstar Rajini and Thalapathy Vijay Suriya Gets this Huge Recognition Details Inside

சூர்யாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி , ரகுல் ப்ரீத் சிங்க் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.இந்த படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போனது.இந்த படம் மே 31ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்த படத்திற்கு ட்விட்டர் எமோஜி வழங்கப்படும் என்று முன்கூட்டியே நாங்கள் தெரிவித்திருந்தோம்.

After Superstar Rajini and Thalapathy Vijay Suriya Gets this Huge Recognition Details Inside

தற்போது இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.ட்விட்டரில் என்ஜிகே சம்மந்தமான மூன்று ஹாஸ்டேக்களை பயன்படுத்தும் போது இந்த எமோஜி தோன்றும்.மேலும் விஜயின் மெர்சல்,ரஜினியின் காலா படங்களை தொடர்ந்து ட்விட்டர் எமோஜி பெரும் மூன்றாவது தமிழ் படம் என்ற பெருமையையும் இந்த படம் பெற்றுள்ளது