தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னர்களான கவுண்டமனி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, ரோபோ சங்கர் ஆகியோரது வரிசையில் இடம் பிடித்தவர் காமெடி நடிகர் யோகி பாபு. 

Yogi Babu To Act With Karunakaran In The Sets Of DharmaPrabhu Movie

காமெடி கதாபாத்திரங்களைத் தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் அசராமல் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வந்த அத்தனை படங்களும் நன்றாக ஓடியது. இவரின் திரைபயணத்தில் இந்த தர்மபிரபு ஒரு முக்கிய மைல்-கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

வந்தா ராஜாவாதான் வருவேன், சதுரங்க வேட்டை 2, விஸ்வாசம், கூர்க்கா போன்ற படங்களில் பிஸியாக இருக்கும் யோகிபாபுவின் தர்மபிரபு படத்திற்கு சென்னை செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 14-ம் தேதி இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது.   

இயக்குனர் முத்துக்குமரன் இயக்கும் இப்படத்திற்கு பண்ணையாரும் பத்மினியும் பட புகழ் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். படத்தில் நடிகர் கருணாகரனும் இருப்பது கூடுதல் வலு சேர்க்கும் என நம்பலாம்.