தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரைக்கதையில் ட்விஸ்ட் அமைத்து அசத்துவதில் வல்லவர் இயக்குனர் வெங்கட் பிரபு.இயக்குனராக மட்டும் இல்லாமல் பாடகராகவும்,தயாரிப்பாளாராகவும் தனது முத்திரையை பதித்து வருகிறார் வெங்கட் பிரபு.

Six Sensational Music Directors Join Hands For This Venkat Prabhu Production

இவரது தயாரிப்பில் வெளியான சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் பெரிய வெற்றியை பெற்றது.இதனை தொடர்ந்து வைபவ் ஹீரோவாக நடித்திருக்கும் RK நகர் படத்தை தயாரித்துள்ளார் இந்த படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து சிம்புதேவன் இயக்கும் படத்தை தயாரிக்கிறார்.

Six Sensational Music Directors Join Hands For This Venkat Prabhu Production

இவரது Black Ticket Company மற்றும் Trident Arts நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு கசடதபற என படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர் இந்த படத்தில் ஆறு எடிட்டர்கள்,ஆறு ஒளிப்பதிவாளர்கள் மற்றும் ஆறு இசையமைப்பாளர்கள் பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Six Sensational Music Directors Join Hands For This Venkat Prabhu Production

படத்தில் வேலைபார்க்கும் ஆறு எடிட்டர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் குறித்த தகவலை ஏற்கனவே வெளியிட்டிருந்தனர்.இதனை தொடர்ந்து தற்போது ஆறு இசையமைப்பாளர்களை அறிவித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா,சந்தோஷ் நாராயணன்,சாம்.சி.எஸ்,சீன் ரோல்டன்,பிரேம்ஜி,ஜிப்ரான் உள்ளிட்ட ஆறு முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.

Six Sensational Music Directors Join Hands For This Venkat Prabhu Production