அதர்வா. இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பூமராங். மேகா ஆகாஷ் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் அவருடன் மேயாத மான் புகழ் இந்துஜா, சதிஷ், ஆர் ஜே பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டார்லிங் 2 புகழ் ரதன் இசையமைத்துள்ளார்

பூமராங் திரைப்படம் மார்ச் 1-ம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள முகையாழி என்ற பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.இந்த ப்ரோமோவை நடிகர் தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.