மக்களை மகிழ்விப்பதில் என்றும் குறை வைத்ததில்லை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. சிறந்த நடிகராக விளங்கும் விஜய்சேதுபதி சீரான எழுத்தாளரும் கூட. இவரது கைவண்ணத்தில் ஆரஞ்சு மிட்டாய், சென்னை பழனி மார்ஸ் போன்ற படங்கள் உருவாகின. இதைத்தொடர்ந்து தற்போது VV18 படத்திற்கும் பணிபுரிய உள்ளார். 

Vijay Sethupathis Writing Avatar For Vishnu Vishal And Vikranth VV18 Project

ஆனந்த் ஜாய் தயாரிக்கும் இந்த படத்தை தாக்க தாக்க புகழ் சஞ்சீவ் இயக்கவுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

Vijay Sethupathis Writing Avatar For Vishnu Vishal And Vikranth VV18 Project

விஷ்ணு விஷாலின் ஜகஜால கில்லாடி, விக்ராந்தின் பக்ரீத் போன்ற படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது. தற்போது இதன் போஸ்ட்டரை விஷ்ணு விஷால் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.