தற்போதைய நிலையில் அனைத்து படங்களிலும் இடம்பெற்றிருக்கும் ஒரு நடிகர் என்றால் அது யோகிபாபு தான்.இவர் இல்லாத படங்கள் மிகவும் குறைவு தான்.தனக்கென ஒரு ஸ்டைலையும்,தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் பெற்றிருக்கும் இவர் கடைசியாக சர்கார்,விஸ்வாசம் என்று இரண்டு பெரிய படங்களில் நடித்துள்ளார்.

Sivakarthikeyan Pens a Song As Lyricist For Yogi Babu Starrer Ghurka Movie

தற்போது தளபதி 63,தர்பார்,இந்தியன் 2 என பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார்.அதோடு ஹீரோவாகவும் தர்மபிரபு,கூர்கா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.கூர்கா படத்தினை டார்லிங் படத்தின் இயக்குனர் சாம் ஆன்டன் இயக்குகிறார்.4 Monkeys Studio நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Sivakarthikeyan Pens a Song As Lyricist For Yogi Babu Starrer Ghurka Movie

ராஜ் ஆர்யன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இந்த படத்தின் ஹே போயா என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் லிரிக்ஸ் எழுதியுள்ளார்.

Sivakarthikeyan Pens a Song As Lyricist For Yogi Babu Starrer Ghurka Movie

கோலமாவு கோகிலா படத்தில் வரும் கல்யாண வயசு பாடலை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மீண்டும் யோகிபாபுவுக்கு லிரிக்ஸ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.