இயக்குனர் பாலாஜி மோஹன் இயக்கத்தில் குறும்புத்தனமான டான் பாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்கும் மாரி 2 படத்தில் ரோபோ ஷங்கர், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், டவினோ தாமஸ் போன்ற நட்சத்திரங்கள் உள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சக்கை போடு போட்டு வருகிறது.

நேற்று நடைபெற்ற மாரி 2 படத்தின் பிரஸ் மீட்டில் நடிகர் தனுஷ் பேசுகையில், மாரி 2 படம் ஆரம்பிக்கும் தருணத்தில் நடிகர் ரோபோ ஷங்கரின் தேதிகள் இல்லாமல் போகிவிட்டதாம். பிறகு இயக்குனர் பாலாஜி மோஹன் தனுஷிடம் மே, ஜூன் போன்ற மாதங்கள் கடந்தால் ரோபோவின் தேதி இல்லை என்று கூறினாராம்.

இதைக்கேட்ட நடிகர் தனுஷ் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக மேடையில் கூறி நெகிழ்ந்தார். மாரி படத்திற்கு பிறகு நடிகர் ரோபோ ஷங்கருக்கு அதிக பட வாய்ப்புகள் வரத்தொடங்கியது என்றே கூறலாம். அதுமட்டுமல்லாமல் திறமையுள்ளவர்களுக்கு வழிவகுக்கும் நடிகர் தனுஷின் இச்செயல் ஆரோக்கியமானதாகும்.