இயக்குனர் பாலாஜி மோஹன் இயக்கத்தில் குறும்புத்தனமான டான் பாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்கும் மாரி 2 படத்தில் ரோபோ ஷங்கர், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், டவினோ தாமஸ் போன்ற நட்சத்திரங்கள் உள்ளனர். 

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான ரவுடி பேபி பாடல் அதிக பார்வையாளர்களை ஈர்த்து இணையத்தில் பெரிதும் வளம் வருகிறது.

தற்போது இதைத்தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாடல் வெளியானது. பாடலை இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா தான் இதற்கு பாடலாசிரியர் என்பது பலருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. யுவனுடன், சின்ன பொண்ணு, தனுஷ், மஹாலிங்கம் ஆகியோர் பாடியுள்ளனர்.