விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவர உள்ளது. இப்படத்தை ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார் என்ற பேச்சு போய் கொண்டிருந்தது. இதற்கிடையே சில காரணங்களால் நடிகர் மாதவனே இப்படத்தை முழுவதும் இயக்கி வருகிறார். 

Ace Actress Simran Joined The Sets Of Rocketry After Petta

அச்சு அசலாக நம்பி நாராயணனாகவே மாறியிருக்கிறார் நடிகர் மாதவன். சாக்லேட் பாய் கேரக்டர் மட்டுமல்லாமல் தனது நடிப்பின் அளவை பட்டைதீட்டும் நடிகர் மாதவனின் இம்முயற்ச்சி பாராட்டிக்குரியதாகும்.

Ace Actress Simran Joined The Sets Of Rocketry After Petta

சமீபத்தில் நம்பி நாராயணன் ரோலுக்காக மாதவன் மேற்கொண்ட மேக்கப் மற்றும் உடல் அமைப்பு மாற்றம் குறித்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார் மாதவன். 

Ace Actress Simran Joined The Sets Of Rocketry After Petta

தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், படத்தில் நடிகை சிம்ரன் நடிக்கிறாராம். அதுவும் திருமதி நம்பி நாராயணனாக நடிக்கிறார். 17 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடிகை சிம்ரனுடன் மாதவன் நடித்திருந்தார், அதற்கு பிறகு இந்த படத்தில் தான் ஜோடி சேர்கின்றனர். நடிகை சிம்ரன் கடைசியாக பேட்ட படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.

Ace Actress Simran Joined The Sets Of Rocketry After Petta