தமிழ் சினிமாவின் legendry இயக்குனராய் மக்கள் மனதில் பல ஆண்டுகள் நீங்கா இடம்பிடித்தவர் இயக்குனர் மணிரத்னம். அமைதியான திரை சூழல், மனதை வருடம் வசனங்கள், சீரான கதை கரு என தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய பெருமை இவரை சேரும். 

Veteran Director Maniratnams Production Venture Titled As Vaanam Kotattum Featuring Vikram Prabhu In Dhana Direction

இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் செக்கச் சிவந்த வானம். உச்ச நட்சத்திரங்கள் நடித்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இயக்கம் அல்லாது தயாரிப்பு பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Veteran Director Maniratnams Production Venture Titled As Vaanam Kotattum Featuring Vikram Prabhu In Dhana Direction

தற்போது வெளியாகியுள்ள செய்தி என்னவென்றால், மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் அடுத்த படம் வானம் கொட்டட்டும் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை தனசேகர் இயக்கவுள்ளாராம்.

Veteran Director Maniratnams Production Venture Titled As Vaanam Kotattum Featuring Vikram Prabhu In Dhana Direction

விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்ற செய்தியும் சிக்கியது. மேலும் இன்னொரு ஹீரோவாக ஜி.வி. பிரகாஷ் குமார் படத்தில் இருக்கக்கூடும் என்ற பேச்சுவார்த்தை போய் கொண்டிருப்பதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Veteran Director Maniratnams Production Venture Titled As Vaanam Kotattum Featuring Vikram Prabhu In Dhana Direction

அவரது படங்கள் தவிர்த்து இதற்கு முன்பு வசந்த் இயக்கிய நேருக்கு நேர், சுசிகணேசன் இயக்கிய 5 ஸ்டார், அழகம்பெருமாள் இயக்கிய டும் டும் டும் போன்ற படங்களை மணிரத்னம் தயாரித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.