லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான டோரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் போன்ற கதாநாயகியை மைய்யமாக கொண்ட படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நயன்தாரா தற்போது ஐரா, விஸ்வாசம், சயீரா நரசிம்ம ரெட்டி, கொலையுதிர் காலம், எஸ்.கே.12 என பிசியாக நடித்து வருகிறார்.  

Billa2 Fame Director Chakri Toleti Is Set To Release His Film During Pongal

தல அஜித் வைத்து பில்லா 2 படம் எடுத்த சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கொலையுதிர் காலம். நீண்ட நாட்களாக உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், படத்தை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பியிருப்பதாகவும் கூறியுள்ள படக்குழு, படம் 2019-ம் ஆண்டு ஜனவரியில் வெளிவரும் என்று அறிவித்துள்ளனர். 

மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம் ஹஷ் என்ற ஹாலிவுட் படத்தை தழுவி உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. பூஜா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

இரண்டு நாட்கள் முன்பு நயன்தாராவின் பிறந்தநாளன்று நவம்பர் 18-ஆம் தேதி இப்படம் குறித்து கூறியிருந்த படக்குழுவினர், தற்போது இப்படத்தை தேவ் மற்றும் அயோக் படம் வெளியாகும் தருணத்தில் வெளியிட முடிவுசெய்திருக்கின்றனர்.