YSR ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்த படமான மாமனிதன் பூஜையுடன் துவங்கியது. படத்தில் காயத்ரி ஹீரோயினாக நடிக்கிறார். ஜோக்கர் பட புகழ் குரு சோமசுந்தரம் விஜய் சேதுபதியின் நண்பராக நடிக்கிறார். படப்பிடிப்பு ஆண்டிப்பட்டியில் துவங்கியது. 

40 நாட்கள் படப்பிடிப்பை நடத்திவிட்டு அதன் பிறகு கேரளா, காசி, ராமேஸ்வரத்திற்கு செல்கிறார்கள் படக்குழுவினர். படத்திற்கு இசைஞானி இளையராஜாவும், யுவுனும் சேர்ந்து இசையமைக்கிறார்கள். இசையமைக்கும் பணி இன்னும் துவங்கவில்லை என்பது கூடுதல் தகவல்.

மைனா, பைரவா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது வெளியாகியுள்ள செய்தி என்னவென்றால், இப்படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ ஓட்டுனராக நடிக்கிறாராம்.

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் ஆட்டோ ஓட்டுனராக நடித்தால் அதுக்கு தனி வரவேற்பு உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆட்டோ ஓட்டுனராக நடித்த பாட்ஷா இன்று வரை பேசப்படுகிறது என்பது நாம் அறிந்தவையே.