தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரும் ,தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவால் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.சிகிச்சை முடிந்து சென்ற வாரம் சென்னை திரும்பினார் விஜயகாந்த்.

SuperStar Rajinikanth Visits DMDK Chief Captain Vijayakanth Residence in Saligramam After his Return From America

இந்நிலையில் இன்று சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டில் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.இருவரும் திரைத்துறையில் இருந்த போது இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.சிகிச்சை முடிந்து திரும்பிய அவரை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

SuperStar Rajinikanth Visits DMDK Chief Captain Vijayakanth Residence in Saligramam After his Return From America

எல்லா கட்சிகளும் தேர்தல் வேளைகளில் பரபரப்பாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இருவரும் சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆனால் இது வெறும் நட்பு ரீதியான சந்திப்பு மட்டும் தான் என சூப்பர்ஸ்டார் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் பூரண குணமடைந்து நலம் பெற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.அதோடு , தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தன்னை முதலில் சந்தித்தவர் விஜயகாந்த் தான் என ரஜினி தெரிவித்தார்.