மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ்.ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜா குமாரராஜாவின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்து வருகிறார்.

சமந்தா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.வேலைக்காரன் படத்தில் நடித்த மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் ரம்யா கிருஷ்ணன்,காயத்ரி,மிருணாளினி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படம் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகிர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.தற்போது இந்த படத்தின் Ding Dong ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.அந்த விடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்