மீசைய முறுக்கு படத்தின் வெற்றியை தொடர்ந்து இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் நட்பே துணை.அறிமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இந்த படத்தை இயக்குகிறார். இயக்குனர் சுந்தர் சி-ன் அவ்னி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Morattu Single Lyric Video From Hiphop thamizha Starrer Natpe thunai Released

இந்த படத்தில் ஆதியுடன் இணைந்து youtube பிரபலங்களான RJ விக்னேஷ்காந்த்,Eruma Saani புகழ் விஜய் ,ஷா ரா ,ராஜ் மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.கரு.பழனியப்பன்,கௌசல்யா,ஹரிஷ் உத்தமன் போன்ற சீனியர் நடிகர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Morattu Single Lyric Video From Hiphop thamizha Starrer Natpe thunai Released

ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் நான்கு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.தற்போது இந்த படத்தில் இருந்து முரட்டு சிங்கள் பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இந்த விடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்