நடிகையின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ! லீக் செய்த ஹேக்கருக்கு பதிலடி
By Sakthi Priyan | Galatta | June 18, 2019 13:00 PM IST
அமெரிக்காவை சேர்ந்த ஹாலிவுட் நடிகை பெல்லா தார்ன் தனது நிர்வாண புகைப்படங்களை திருடி தொல்லை கொடுத்து வந்த ஹேக்கருக்கு வித்தியாசமான முறையில் பதிலடி கொடுத்துள்ளார்.
ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர். அவர் நடிப்பது தவிர்த்து நன்றாக பாடவும் செய்வார். பெல்லா தனது செல்போனில் தன்னை நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார். இந்நிலையில் யாரோ அவரின் செல்போனை ஹேக் செய்து அவரின் நிர்வாண புகைப்படங்களை வைத்து அவரை மிரட்டி வந்தார்.
ஹேக்கரின் மிரட்டலால் மன உளைச்சலுக்கு ஆளானார் பெல்லா. இதையடுத்து நீ என்ன என் நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டுவது என்று அவரே அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ஹேக்கரை திட்டி தக்க பதிலடியும் தந்துள்ளார். இச்செய்தி அறிந்த ரசிகர்கள் பெல்லா தார்னின் போல்ட்டான குணத்தை பாராட்டி வருகின்றனர்.