தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என பொறுப்பான பதவிகளில் இருப்பவர் நடிகர் விஷால். அவரது 26-வது படமான அயோக்யா படத்தை இயக்குனர் மோஹன் இயக்குகிறார். விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இதில் விஷாலுடன் நடிகை ராஷி கண்ணா ஜோடியாக நடிக்கிறார். மேலும் விஷாலுடன் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பார்த்திபன் போன்ற நடிகர்கள் நடித்து வருகின்றனர். 

  Ayogya Movie Starring Puratchi Thalapathy Vishals First Look Poster Issue

இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அதில், போலீஸ் ஜீப்பில் கையில் பீர் பாட்டிலுடன் விஷால் அமர்ந்திருப்பது போன்று காட்சி உள்ளது. இந்த போஸ்ட்ருக்கு அரசியல் கட்சி சார்ந்த தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த போஸ்டரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்திவருகின்றனர். 

Ayogya Movie Starring Puratchi Thalapathy Vishals First Look Poster Issue  

சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தின் முதல் லுக் வெளியான நேரத்திலும் இது போன்ற பிரச்சனை கிளம்பியது என நாம் அறிந்தவயே. ஆரம்ப கட்டத்தில் எதிர்ப்புகளை சந்திக்கும் படம் நிச்சயம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் புரட்சி தளபதியின் ரசிகர்கள்.