தளபதி-63 படத்தின் பணிகள் இனிதே பூஜையுடன் சில நாட்கள் முன்பு துவங்கியது. இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 

ஏற்கனவே தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர் அடுத்த படைப்பில் தளபதியை எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆவல் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு , கலை இயக்குனராக முத்துராஜ் தங்கவேல், எடிட்டராக ரூபன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக் போன்றோர் பணியாற்றுகின்றனர். அதுமட்டுமல்லாமல், இப்படம் பக்கா மாஸாக இருக்கும் என்று பிரஸ் மீட்டின் போது தயாரிப்பாளர் தெரிவித்தார்.

Famous Actor Joined Hands With Thalapathy Vijay In Thalapathy 63

தற்போது வெளிவந்த செய்தி என்னவென்றால், சின்ன கலைவானர் விவேக்கிடம், தளபதி 63 படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்று கேட்க சத்தியமா நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார் விவேக். காமெடி மற்றும் குணச்சித்திர கதா பாத்திரங்கள் ஏற்று நடிக்கும் விவேக், நடிப்பை தாண்டி பல சமூக நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது நாம் அறிந்தவேயே. தளபதி விஜயுடன் குஷி, யூத், தமிழன், உதயா,ஆதி, குருவி,திருமலை போன்ற படங்களில் விவேக் இணைந்து நடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.