விர்ஜின் பசங்களின் நாயகன் என இளைஞர்கள் மத்தியில் போற்றப்படும் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் சர்வம் தாளமயம் என்ற திரைப்படம் திரைக்கு வெளிவரும் முன்னரே 31-வது டோக்கியோ திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.   

மைண்ட் ஸ்க்ரீன் சினிமாஸ் தயாரிப்பில் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். மேலும் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய கடைசி வரிகள் இப்படத்தில் தான். பீட்டர் என்ற கதாப்பாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.   

Sarvam Thaalamayam Movie Audio Track List Announced By ARR Directed By Rajiv Menon

சிறந்த ஒளிப்பதிவாளராகவும் இயக்குனராகவும் திரையுலகில் தன்னை நிலைநிறுத்தி கொண்ட ராஜிவ்மேனன் இப்படத்தில் லைவ்-சின்க் சவுண்ட் ரெகார்டிங் என்ற தொழில்நுட்ப காரணியை வைத்து இயக்கிருக்கிறார். இதற்க்கு முன்பு ஹேராம் மற்றும் ஆயுத எழுத்து போன்ற படங்களில் இந்த லைவ்-சின்க் ரெகார்டிங் முறை பயன்படுத்தப்பட்டது. தற்போது இப்படத்தின் ஆறு பாடல்கள் கொண்ட ட்ராக்-லிஸ்ட் வெளியானது.   

1. பீட்டர் பீட்ட யேத்து  2. மாயா மாயா  3. சர்வம் தாளமயம்  4. வரலாமா  5. டிங்கு டாங்கு  6. மாக்ஏலர விசாரமு 

மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரை தொடர்ந்து பாடலாசிரியர்கள் மதன் கார்கி மற்றும் அருண் ராஜா காமராஜ் பாடல் எழுதியுள்ளனர். இப்படத்தில் சிம்டங்காரன் புகழ் பாடகர் பம்பா பாக்யா ஒரு பாடலை பாடியுள்ளார். தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்க்கார் படத்தில் சிம்டங்காரன் பாடலுக்கு பிறகு ஜி.வி-க்கு தான் பாடியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.