ரங்கா படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் சிபிராஜ் தீவிர விஜய் ரசிகர் என்பது நாம் அறிந்தவையே. ட்விட்டரில் ரசிகர் ஒருவர் இதுவரை பொங்கலுக்கு ரிலீஸான தளபதி படங்களில் பிடித்த படம் எது என கேட்டிருந்தார். 

அதற்கு 'போக்கிரி' படம் என்று பதிலளித்தார் சிபிராஜ். பிரபுதேவா இயக்கத்தில் தளபதி விஜய், அசின் நடிப்பில் வெளிவந்த இப்படம் அனைத்து தரப்பு தளபதி ரசிகர்களுக்கும் பிடித்த படமாகும்.

வைகைபுயல் வடிவேலு, பிரகாஷ்ராஜ், நாசர் என பல நட்சித்திரங்கள் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் தளபதியுடன் சேர்ந்து நடிப்பீர்களா ? என்ற கேள்வியை முன்வைத்த ரசிகருக்கு, காத்திருக்கிறேன் ப்ரோ என்று பதில் தெரிவித்தார் சிபிராஜ்.