தளபதி-63 படத்தின் பணிகள் இனிதே பூஜையுடன் சில நாட்கள் முன்பு துவங்கியது. இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.   

ஏற்கனவே தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர் அடுத்த படைப்பில் தளபதியை எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆவல் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.   

இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு , கலை இயக்குனராக முத்துராஜ் தங்கவேல், எடிட்டராக ரூபன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக் போன்றோர் பணியாற்றுகின்றனர். அதுமட்டுமல்லாமல், இப்படம் பக்கா மாஸாக இருக்கும் என்று பிரஸ் மீட்டின் போது தயாரிப்பாளர் தெரிவித்தார். 

Comedian Yogi Babu To Join Thalapathy 63 Team Continued By Vivek

தற்போது படத்தில் நடிகர் விவேக்கை தொடர்ந்து நடிகர் யோகிபாபுவும் இணைந்திருக்கிறார் என்பது தான். வேலாயுதம், மெர்சல், சர்க்கார் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக தளபதியுடன் கைகோர்க்கிறார் யோகிபாபு. தளபதியுடன் யோகிபாபு தோன்றும் காட்சிகள் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கலாம்.