தமிழ் திரையின் முடிசூடா மன்னனாகவும், ரசிகர்களின் உடன் பிறவா அண்ணனாகவும் விளங்குபவர் தளபதி விஜய். அட்லீ இயக்தில் தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார். தளபதி விஜயின் அடுத்த படத்தை மாநகரம் புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கப்போவதாக நெருங்கிய திரை வட்டாரங்கள் மூலம் செய்தி தெரிய வந்தது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கார்த்தி நடிக்கும் கைதி படத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது கூடுதல் தகவல். 

Clarification On Thalapathy Sixty Four Movie Project Heroine Update

தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு 50 நாட்களில் முடிக்கப்படுமாம். அதுமட்டுமல்லாமல் 2020-ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என்ற சிறப்பு செய்தியும் வெளியானது.ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க வாய்ப்புள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது.

Clarification On Thalapathy Sixty Four Movie Project Heroine Update

தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி பரவி வந்தது. இதுகுறித்து தளபதி 64 படக்குழுவினரிடம் கேட்ட போது, முற்றிலும் தவறான செய்தி. இன்னும் முடிவாகவில்லை என்று தெளிவு படுத்தினர்.

Clarification On Thalapathy Sixty Four Movie Project Heroine Update