அடுத்த ஆண்டு ரிலீசாக உள்ள படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிற ஒரு படம் தளபதி 63.தெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து தளபதி விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ மூன்றாவது முறையாக இணைகின்றனர்.இந்த படத்தை AGS நிறுவனம் தயாரிக்கிறது.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.கதிர்,யோகி பாபு,விவேக்,ஆனந்த் ராஜ்,டேனியல் பாலாஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்துள்ளது .ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Vijay TV Super Singer Star Joins the Cast of Thlapathy 63 Thalapathy Vijay Starrer Atlee Directorial

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாத இறுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் புகழ் பூவையார் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.அதோடு இந்த படத்திற்காக ஒரு பாடலிலும் பாடியுள்ளார் என்ற தகவல்களும் வந்துள்ளன.இதனால் தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.