அட்லீ இயக்கவிருக்கும் தளபதி 63 படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர் அடுத்த படைப்பில் தளபதியை எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆவல் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. 

Director Aka Lyricist Vignesh Shivns Current Tweet About Thalapathy 63 Director Atlee

இந்நிலையில் ராக்ஸ்டார் அனிருத் இசையில் நேற்று வெளியான ஜெர்ஸி படத்தின் பாடல் குறித்து ட்வீட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், தளபதி 63 படப்பிடிப்பில் இருந்தும் பாடலை கேட்டுள்ளீர்கள் என நன்றி தெரிவித்து பதிவு செய்திருக்கிறார்.

இரு பெரும் இயக்குனர்கள் மத்தியில் இருக்கும் இந்த ஒற்றுமை கலை துறைக்கு அமைந்த ஆரோக்கியமான விஷயம் என்றே கூறலாம். பிறரின் படைப்பை பாராட்டி மகிழும் விக்னேஷ் சிவன் மற்றும் அட்லீயின் இச்செயல் வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கு எடுத்துக்காட்டாய் திகழ்கிறது.

Director Aka Lyricist Vignesh Shivns Current Tweet About Thalapathy 63 Director Atlee