தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் தளபதி 63 படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர் அடுத்த படைப்பில் தளபதியை எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆவல் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. 

Thalapathy 63 Title Yet To Be Confirmed By The Production Side

இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு , கலை இயக்குனராக முத்துராஜ் தங்கவேல், எடிட்டராக ரூபன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக் போன்றோர் பணியாற்றுகின்றனர். அதுமட்டுமல்லாமல், இப்படம் பக்கா மாஸாக இருக்கும் என்று பிரஸ் மீட்டின் போது தயாரிப்பாளர் தெரிவித்தார்.

விளையாட்டை மைய்யமாக இருக்கும் என சில செய்திகள் கடந்த இரண்டு நாட்கள் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் ஆளப்போறான் தமிழன் என வைக்கப்படவுள்ளதாக தகவல் ஏற்கனவே சொல்லப்பட்டது. ஆனால் தற்போது பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம்.

மேலும் அந்த டைட்டிலை அட்லி வேறு படத்திற்காக பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படக்குழுவினர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை ரசிகர்கள் காத்திருக்கு வேண்டும்.