தளபதி ரசிகர்களுக்கு இனிப்பூட்டும் செய்தியொன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் தளபதி-63 படத்தின் பணிகள் இனிதே பூஜையுடன் இன்று காலை துவங்கியது. இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியாகியது. 

ஏற்கனவே தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர் அடுத்த படைப்பில் தளபதியை எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆவல் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

தற்போது நடைபெற்ற பிரஸ் மீட்டில் தயாரிப்பாளர் கல்பதி.எஸ்.அகோரம் அவர்கள் படக்குழு அதாவது தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் குறித்து வெளியிட்டார்.

ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு , கலை இயக்குனராக முத்துராஜ் தங்கவேல், எடிட்டராக ரூபன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக் என அறிவித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், இப்படம் பக்கா மாஸாக இருக்கும் என்றும் மேலும் படம் பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.

Thalapathy 63 Will Be A Pakka Mass Family Entertainment Said By Producer