தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் தனுஷ்.நடிப்பதில் மட்டுமின்றி தயாரிப்பு,இயக்கம்,பாடலாசிரியர் என பல பரிமாணங்களை எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

Vikram Vedha Popular Star Bags Actor Dhanush Most Expected Next Film Full Details Here

தமிழில் மட்டுமின்றி ஹிந்தியிலும் இவர் நடித்த இரண்டு படங்களும் செம ஹிட் அடித்தன.இதனை தொடர்ந்து தனது திறமையை ஹாலிவுட் படங்களிலும் காட்ட தயாரானார் தனுஷ்.இவர் நடிப்பில் உருவான எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் ஃபகீர்’ எனும் பிரெஞ்ச்-ஆங்கில படம் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விமர்சகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

Vikram Vedha Popular Star Bags Actor Dhanush Most Expected Next Film Full Details Here

இந்த படம் இந்தியாவில் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.விக்ரம் வேதா படத்தின் தயாரிப்பாளர் ஷஷிகாந்த்தின் YNOTX நிறுவனம் தற்போது இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடவுள்ளது.இந்த படத்திற்கு பக்கிரி என்று பெயரிட்டுள்ளதாகவும் இந்த படம் ஜூன் 21ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Vikram Vedha Popular Star Bags Actor Dhanush Most Expected Next Film Full Details Here