தமிழ் திரையுலகில் கலை தாகம் அதிகம் நிறைந்த நடிகர்களில் ஒருவர் சூர்யா. நடிப்பில் உச்சம் தொட்டது போல் தனது கல்வி அறக்கட்டளை மூலம் அதிக கல்வி உதவி புரிந்தும் வருகிறார். 

Kamal Haasan Supports Suriya For Speech

சமீபத்தில் அவர் நீட் தேர்வு மற்றும் புதிய கல்வி கொள்கை பற்றிபேசியுள்ளார். அவர் நடத்திவரும் அகரம் ஃபவுண்டேஷன் விழாவில் பேசிய அவர் 30 கோடி மாணவர்கள் வாழ்க்கையை பாதிக்கும் விஷயம் புதிய கல்வி கொள்கை எனகூறியுள்ளார். கிராமங்களில் 1 ஆசிரியர் மற்றும் 10 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகள் மூடப்படும் என கூறுகின்றனர்.

Kamal Haasan Supports Suriya For Speech

அவர்கள் எங்கே போவார்கள்? மூன்று வயதிலேயே மூன்று மொழிகளை திணிப்பது தவறு. பத்து வருடமா எதுவும் மாறவில்லை. 30 சதவீத மாணவர்கள் ஆசிரியர்களே இல்லாமல் படிக்கிறார்கள். அவர்கள் எப்படி தேர்வுகள் எழுதுவார்கள். அத்தனை தேர்வுகளை தாண்டி, அதை மயிருனு தூக்கிபோட்டுட்டு கெட்ட வார்த்தை பேசியதற்கு மன்னிக்கவும், வேறு ஒரு நுழைவு தேர்வு எழுத வேண்டும் என்கிறார்கள்.

Kamal Haasan Supports Suriya For Speech

கற்பித்தலை நிறுத்திவிட்டு அனைத்தும் இனி கோச்சிங் சென்டர்களாக மாறிவிடும் என சூர்யா ஆவேசமாக பேசியுள்ளார். மேலும் கோச்சிங் சென்டர்களின் வருமானம் குறித்தும் பேசியுள்ளார். இதற்கு பல திசைகளில் ஆதரவு மற்றும் பாராட்டுகள் இருந்து வந்தாலும், பல திசைகளில் எதிர்ப்புகளும் கிளம்பி வருகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யாவிற்கு உலகநாயகன் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்து அறிக்கையை வெளியிட்டுள்ளார்.