இறுதிசுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் படம் சூரரைப் போற்று. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற குனிட் மோங்கா துணை தயாரிப்பாளராக பணிபுரிகிறார். 

Suriya Soorai Pottru Gets A New Update

படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், இப்படத்தின் இறுதிகட்ட ஆடியோ பணியில் இருப்பதாக சமீபத்தில் தெரிவித்தார். ஓ.பி. ஜிந்தால் விமான நிலையத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், படக்குழுவினர் சென்னை திரும்பியதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. முதல் லுக் போஸ்டரிலே விமானம் கொண்டுள்ளதால், படத்தின் முக்கிய காட்சிகளை இங்கு படமாக்கியிருக்கலாம் என்ற கருதப்படுகிறது.

Suriya Soorai Pottru Gets A New Update Suriya Soorai Pottru Gets A New Update

சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் கருணாஸ் இருப்பது தெரியவந்தது. தற்போது பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானது. ரன்பீர் கபூர் நடித்த சஞ்சு படத்தில் அப்பா பாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் பரேஷ். தமிழில் இவர் நடிக்கும் முதல் படம் இதுதான் என்பது கூடுதல் தகவல்.

Suriya Soorai Pottru Gets A New Update