சாமி 2 படத்திற்க்கு பிறகு விக்ரம் அடுத்ததாக தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.    

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

Visual Treat For Cinema Fans Petta Third Look And Vikram Kadaram Kondan Motion Poster

பேட்ட படத்தின் மூன்றாம் போஸ்டர் வைரலாகி வரும் நிலையில், சியான் விக்ரமின் மாறுபட்ட தோற்றம் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. தற்போது கடாரம் கொண்டான் படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் பெரிதளவில் பார்க்கப்பட்டு வருகிறது. ஒருபுறம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூன்றாம் லுக் மறுபுறம் சியான் விக்ரமின் மோஷன் போஸ்டர் என கொண்டாடத்தில் உள்ளனர் சினிமா பிரியர்கள்.