சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் பேட்ட. ஏற்கனவே இப்படத்தின் மோஷன் போஸ்ட்டரை வெளியிட்டு அசத்தினர் படக்குழுவினர்.   

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர். 

சமீபத்தில் பேட்ட படத்தின் மூன்றாம் லுக் போஸ்ட்டர் வெளியானது. அதில் நடிகை சிம்ரனுடன் ரஜினிகாந்த் கையில் பூங்கொத்துடன் கிளாஸாக ஒரு வாக் செய்வது போன்ற லுக் மிகவும் அழகாக அமைந்திருக்கிறது. மேலும் போஸ்டரில் பொங்கல் பராக் என்று குறிப்பிட்டிருந்தது, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

வரும் டிசம்பர் 12-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று பேட்ட படத்தின் டீஸரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் கூறுகிறது. அதுமட்டுமல்லாமல் பேட்ட படத்தின் சிங்கில் ட்ராக்கும் அன்றே வருவதாக தகவல் கசிந்து வருகிறது.   

கூடுதல் சுவையூட்டும் வகையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை டிசம்பர் 16 அன்று நடைபெறுவதாக தகவல் பரவி வருகிறது. தயாரிப்பு மற்றும் படக்குழுவினர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்பது நலம்.