சூப்பர் டீலக்ஸ் - பல கதைகளை சுற்றி வரும் சுரங்கப்பாதை. ஆத்திரம் நிறைந்த இளைஞன் மற்றும் அவனது குறும்புத்தனமான நண்பர்கள், நிச்சயக்கப்பட்ட திருமண தம்பதிகளின் வாழ்க்கை மற்றும் அவர்களது உணர்வுகள், குடும்பங்கள் மற்றும் இச்சமூகம் திருநங்கைகளை பார்க்கும் கோணம். இதை அழகாக சமர்பித்திருக்கிறார் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா.

Disco Dancer Video Song From Super Delux Movie Released

வேம்பு, முகில், அற்புதம், லீலா, ஷில்பா, ராசுக்குட்டி, காஜி, முட்ட பப்ஸ், தூயவன், சூரி இந்த பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் என்பதை விட வாழ்ந்திருக்கிறார்கள். படத்தில் முதலில் ஈர்க்கும் ஒரு விஷயம் வண்ணங்கள். அருமையான DI பணிகள். தரமான தொழில்நுட்பம் மற்றும் கதையம்சத்துடன் இறங்கி அடித்திருக்கின்றனர் படக்குழு.

Disco Dancer Video Song From Super Delux Movie Released

யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம். ஓவரான இசையை திணிக்காமல், சரியான இடத்தில் BGM அமைந்தது செவிகளுக்கு தேனூட்டியது. தற்போது இந்த படத்தின் டிஸ்கோ டான்சர் பாடலின் வீடியோ வெளியாகி ஈர்த்து வருகிறது. இந்த வருடத்தின் சிறந்த படங்களில் சூப்பர் டீலக்ஸும் ஒன்று.