தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜீ.வி.பிரகாஷ்.கைநிறைய பல படங்களை வைத்துள்ளார்.இந்த வருடத்தில் தன்னுடைய முதல் ரிலீசான சர்வம் தாள மயம் அவருக்கு நல்ல பெயரையும் தொடக்கத்தையும் பெற்று தந்தது.

இதையடுத்து விஜய் இயக்கத்தில் வாட்ச்மேன் திரைப்படம் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.ஒரு நாய் தனது முதலாளியை காப்பாற்ற போராடுவதை போல் அமைந்துள்ள இந்த ட்ரைலருக்கு ரசிகரகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்