நடிகர் கார்த்தி தமிழ் சினிமா துறையில் தனது ஒவ்வொரு படத்திலும் புதிய இயக்குனர்களை தேர்வு செய்து அவர்களுடன் சேர்ந்து தரமான ஸ்கிரிப்ட்டுகளை ஆராய்ந்து பணிபுரியும் நபர் என்பது நாம் அறிந்தவையே. அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் தேவ். 

கார்த்தி 18 படத்தை மாநகரம் பட புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் கார்த்தியுடன் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து செய்தி ஏதும் வெளியாகவில்லை.

Remo Movie Director To Join Hands With Actor Karthi Followed By SK

தற்போது வெளியான செய்தி என்னவென்றால், நடிகர் கார்த்தி இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனுடன் சேர்ந்து அடுத்த படம் செய்ய போகிறார் என்ற செய்தி நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் தெரிய வந்தது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் வைத்து ரெமோ எனும் படத்தை இயக்கி, ரசிகர்கள் மத்தியில் பதிவாகிவிட்டார் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்பது சினிமா விரும்பிகளுக்கு நலம் என்றே கூறலாம்.