சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்தினை இரும்புத்திரை படத்தின் இயக்குனர் P.S.மித்ரன் இயக்குகிறார்.24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Sivakarthikeyan to Pair With Famous Director Daughter in his Upcoming Film With Irumbuthirai Fame Mithran

ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் சி வில்லியம்ஸ் மற்றும் எடிட்டராக ரூபன் ஒப்பந்தமாகியுள்ளனர்.SK15-னின் ஷூட்டிங் மார்ச் மாதம் 1ஆம் தேதி தொடங்கவுள்ளது.இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.இவர் பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகள் ஆவர்.மேலும் துல்கர் சல்மான் நடிக்கும் வான் திரைப்படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan to Pair With Famous Director Daughter in his Upcoming Film With Irumbuthirai Fame Mithran

Mr.Local ,SK-14, SK-15 என அடுத்தடுத்து அப்டேட்கள் வெளிவருவதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.