இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் என்றழைக்கப்படும் தமிழ் சினிமாவின் சென்சேஷனான சிவகார்த்திகேயன் தனது எஸ்.கே 13 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, சதீஷ், ராதிகா, தம்பி ராமைய்யா ஆகியோர் நடித்துவருகின்றனர். 

Sivakarthkeyan 13 Actress Radhika Sarathkumar Released The Night Shoot Pic From The Sets

ஜித்து ஜில்லாடி என்ற டைட்டில் என கூறப்பட்டு வரும் எஸ்.கே 13 படத்திற்கு ஹிப்-ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.  அக்டோபர் 13-ஆம் தேதி துவங்கிய இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் உள்ளதாம். மேலும் இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நவம்பர் இரண்டாம் வாரம் துவங்கி நடைபெற்று வருகின்றன.     

தற்போது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து இரவு நேர ஷூட்டிங் புகைப்படத்தை வெளியிட்டார். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ராதிகாவும் நகைச்சுவையில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.