A.R.முருகதாஸின் உதவி இயக்குன்னராக இருந்து டிமாண்டி காலனி படம் மூலம் இயக்குனர் ஆனவர் அஜய் ஞானமுத்து.இந்த படம் மிக சிறந்த பேய் படம் என பலரது வரவேற்புகளை பெற்றது.இதையடுத்து இவர் இயக்கிய படம் இமைக்கா நொடிகள். நயன்தாரா,அதர்வா,ராஷி கண்ணா,அனுராக் கஷ்யுப் உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்டது.

Chiyaan Vikram Signs his with Imaikaa Nodigal Director Ajay Gnanamuthu To be officially announced Soon

தற்போது இவர் அடுத்ததாக இயக்கும் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.சியான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படத்தை இவர் இயக்கவுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது.இதனை உறுதி செய்ய இயக்குனர் அஜய் ஞானமுத்துவை தொடர்பு கொண்டோம்.அவர் இந்த படத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அனைத்தும் உறுதியான பிறகு அதிகாரபூர்வமாக அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Chiyaan Vikram Signs his with Imaikaa Nodigal Director Ajay Gnanamuthu To be officially announced Soon

ஏற்கனவே விக்ரமிற்கு இந்த வருடம் கடாரம் கொண்டான்துருவ நட்சத்திரம்,மகாவீர் கர்ணா உள்ளிட்ட படங்களோடு இப்போது இந்த படமும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதால்.சியான் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.