இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான காற்றின் மொழி படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது. ஹிந்தியில் வித்யா பாலன் நடித்த பத்திரத்தை, ஜோதிகா இன்னும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

Actor Surya Conveyed His Wishes For Kaatrin Mozhi Movie Crew And Thanked STR

ஆர்.ஜெ வாக ஜோதிகா நடித்திருக்கும் இந்த படத்தில் வித்தார்த், லக்ஷ்மி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி போன்ற நட்சத்திரங்கள் கலக்கியிருக்கின்றனர்.

படத்தில் சிறப்பு தோற்றமளித்த நடிகர் சிம்பு வரும் காட்சிகள் திரையரங்கை அதிரவைத்தது. இதற்க்கு நன்றி கூறும் வகையில், நடிகர் சூர்யா படத்தை பார்த்துவிட்டு அனைவரையும் பாராட்டியுள்ளார். மேலும் நடிகர் சிம்புவுக்கு தனது மனமார்ந்த நன்றியையும் பதிவிட்டார் சூர்யா.

நிச்சயமாக தமிழ் சினிமா ரசிகர்கள் இப்படத்தை வெற்றியடையச்செய்வர் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.