இன்றைய இளைஞர்களின் favourite ஆன இசையமைப்பாளர் அனிருத்.ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து இசையமைக்கும் இவர் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மட்டுமே இசையமைத்துள்ள இவரின் வளர்ச்சியை பார்த்து பலரும் பிரமித்து போயுள்ளனர்.

Anirudh To Make His Small Screen Debut With this Popular TV Show in Leading Channel

ரஜினி,விஜய்,அஜித்,சிவகார்த்திகேயன்,விஜய்சேதுபதி,சூர்யா,தனுஷ் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களுக்கும் இசையமைத்துவிட்டார்.அதோடு தெலுங்கு சினிமாவிலும் தனது முத்திரையை பதித்து வருகிறார்.அடுத்ததாக சூப்பர்ஸ்டாரின் தர்பார் , கமல்ஹாசனின் இந்தியன் 2 என இரண்டு பிரம்மாண்ட படங்களில் பணியாற்றி வருகிறார்.

Anirudh To Make His Small Screen Debut With this Popular TV Show in Leading Channel

தற்போது இவர் விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இணைந்துள்ளார்.அடுத்ததாக துவங்க உள்ள சீசனுக்கான அதிகாரபூர்வ ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.முன்னதாக இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் ,யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்