ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குனர் பிரபு இயக்கத்தில் ரேடியோ புகழ் பாலாஜி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் LKG. இப்படத்தில் பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டர்கள் மற்றும் ட்ரைலர் திரை ரசிகர்களை மிகவும் ஈர்த்தது. 

LKG Movie Promo Released Featuring RJ Balaji And Nanjil Sampath Dubbing

தற்போது படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இது போன்ற விஷயங்கள் படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்கு வலு என்றே கூறலாம். அரசியல் சப்ஜெக்ட் உள்ள இப்படம் நிச்சயம் பேசும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அரசியல் பிரபலம் நாஞ்சில் சம்பத்தின் பேச்சுக்கள் கேட்காதோர் யாரும் இருக்க இயலாது. அவரது நாவில் தமிழ் தாயே குடியிருக்கிறாள் என்று கூறலாம். அந்த அளவிற்கு சொல்லின் செல்வராக சிறந்த பேச்சாளராக இருந்தவர், திரையில் இயல்பான தமிழ் பேசி எப்படி நடிக்கப்போகிறார் என்பதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

LKG Movie Promo Released Featuring RJ Balaji And Nanjil Sampath Dubbing