சந்தானம் , சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராமர் !
By Sakthi Priyan | Galatta | June 15, 2019 18:15 PM IST
விஜய் டிவி-யின் மூலம் பிரபலமாகி சினிமாவில் ஜொலிப்பவர்கள் ஏராளம். சந்தானம், சிவகார்த்திகேயன், மா.கா.பா. ஆனந்த், ரம்யா, ஜாக்கெலின் என பலர் சினிமாவில் தோன்றிய நிலையில் தற்போது தொலைக்காட்சி நட்சத்திரம் ராமரும் நடிக்கவிருக்கிறார்.
ஒரு சில காட்சிகளில் வந்து சென்றவர் தற்போது ஹீரோவாக களமிறங்கவுள்ளார். இந்த படத்தில் இவருடன் யோகிபாபுவும் இணைந்து நடிக்கிறார். பலூன் பட இயக்குனர் ஸ்ரீனிஷ் இந்த படத்தை தயாரிக்கிறார்.
சின்னத்திரையில் அனைவரையும் மகிழ்வித்தவர், பெரிய திரையில் நிச்சயமாக ஈர்ப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.