அடங்க மறு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் கோமாளி.இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹெக்டே இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.

Comali Theatrical Right Bagged Sakthi Film Factory

Vels International Films இந்த படத்தை தயாரிக்கிறது.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Comali Theatrical Right Bagged Sakthi Film Factory

இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமத்தை பிரபல சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஏற்கனவே வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான LKG படத்தையும் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Comali Theatrical Right Bagged Sakthi Film Factory