சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் பேட்ட. ஏற்கனவே பேட்ட படத்தின் மோஷன் போஸ்ட்டரை வெளியிட்டு அசத்தினர் படக்குழுவினர்.   

மேலும் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் என நட்சித்திர பட்டாளமே பேட்ட படத்தில் உள்ளது. 

படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து இணையத்தை கலக்கி வரும் நிலையில், சமூக அக்கறையுடன் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவிட்டிட்டிருக்கிறார்.   இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் அல்லாது திரை பிரபலங்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறன்றனர்.

நம் நாட்டில் அதிகரித்து வரும் ஆணவக்கொலைகள் தொடர்பாக பல்லாண்டு தலை விரித்தாடும் சாதி வன்கொடுமையை ஒழிக்க நாம் ஒன்றிணைந்து செயல் பட வேண்டும் என பதிவிட்டிருக்கிறார்.