கென்னடி கிளப்பின் கபடி கபடி வீடியோ பாடல் வெளியானது !
By Sakthi Priyan | Galatta | June 19, 2019 18:19 PM IST
ஏஞ்சலினா, சாம்பியன் படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கென்னடி கிளப். சசிகுமார், இயக்குனர் இமயம் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகி வருகிறது.
சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.
தற்போது இந்த படத்திலிருந்து கபடி கபடி வீடியோ பாடல் வெளியானது. ரேஸ்மி சதீஷ், ஸ்ரீநிதி, சூர்யா பத்ரிநாத் ஆகியோர் பாடியுள்ளனர். விவேகா பாடல் வரிகளை எழுதியுள்ளார். கபடி விளையாட்டை கொண்ட இந்த படம் வெற்றியடைய கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.