எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம் கொம்புவச்ச சிங்கம்டா. இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறாராம். இந்த படத்தில் நடிகர்கள் சூரி மற்றும் யோகி பாபு உள்ளனர். மேலும் பிரபல இயக்குனர் மகேந்திரன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் துவங்கியுள்ளது என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது. படப்பிடிப்பில் நடிகர் சூரியும் உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

சமீபத்தில் இவர் நடித்த பேட்ட படத்தின் கேரக்டர் போஸ்டர் வெளியாகி பெரும் அளவில் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து இச்செய்தி சசிகுமார் ரசிகர்களுக்கு சுவையூட்டும் செய்தியாக அமையும் என்றே கூறலாம்.