அறம் படத்தின் மூலம் திரை ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் கோபி நயினார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ஜெய் வைத்து படம் இயக்கத்திட்டமிட்டிருந்தார் கோபி. அந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்திகள் வெளியானது. 

Actor Jai Opens Up About His Three Months FootBall Practise For Gopi Nainars Project

தற்போது ஜெய் நடிக்கும் அந்த படத்தின் பெயர் கருப்பர் நகரம் என சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் உறுதி செய்தார் நடிகர் ஜெய். இந்த படம் முழுக்க முழுக்க வடசென்னை பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை மைய்யமாக கொண்டு உருவாகிவருகிறதாம்.

Actor Jai Opens Up About His Three Months FootBall Practise For Gopi Nainars Project

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், படத்தில் கால்பந்து விளையாட்டு குறித்து அதிகமாக பேசியிருக்கின்றனராம். இன்டர்நேஷனல் ஃபுட்பால் போட்டிக்கும், நம் ஊரில் நடக்கும் கால்பந்து போட்டிக்கும் இருக்கும் வித்தியாசம் குறித்து பேசப்பட்டதாக நடிகர் ஜெய் கூறியிருந்தார்.

Actor Jai Opens Up About His Three Months FootBall Practise For Gopi Nainars Project

சென்னை 28 படத்தில் கிரிக்கெட் விளையாடிய ஜெய் இடம், கால்பந்து விளையாட்டை முறையாக கற்றுகொள்ள வேண்டுமாறு இயக்குனர் கேட்டுக்கொண்டாராம். இதனால் மூன்று மாதம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தாராம் நடிகர் ஜெய். வரிசையாக தமிழ் சினிமாவில் கால்பந்து தொடர்பாக படங்கள் வருவதால் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர் சினிமா விரும்பிகள்.

Actor Jai Opens Up About His Three Months FootBall Practise For Gopi Nainars Project